செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டு என்பதும்,  மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு உண்டு என்பதும்,  சூத்திரர்கள் – பஞ்சமர்கள் – பெண்கள் உட்பட அனைவருக்கும் தீட்டு உண்டு என்பதும்,  அவரவர்களுக்கான குல  தொழிலை,  அவரவர் செய்ய வேண்டும், அதை  மீறக் கூடாது என்பதும் சனாதனத்தின் அடிப்படையில் கூறுகள்.  இவை அனைத்தும் தெரிந்தும் திரிபு வாதம் செய்கிற கும்பலில் ஒருவர்தான் அண்ணாமலை.

அவர் நந்தனை பற்றிய முழு வரலாறு படித்திருக்க வாய்ப்பில்லை. நந்தன் பெரியபுராணத்தில் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறான்.  அவருக்கு பெரிய புராணக் கதை மட்டும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நந்தன் ஒரு மன்னனாக இருந்தான். அவன் பெரியபுராணத்தில் வருகிற கற்பனை கதாபாத்திரம் இல்லை என்கிற ஆய்வு நடத்த பெற்று,  எனது கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அதிலே முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார்.

அந்த அடிப்படையில் தான் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி இருக்கிறார் அது நியாயமான கோரிக்கை…. இதுவும் ஒரு வகையான திரிபுவாதம்.முதல்வர் என்கிற முறையில் அவருக்கு அழைப்பு வந்தது. மம்தா பனர்ஜி அவர்களும் முதல்வர் என்ற முறையில் அந்த விருந்தில் கலந்து கொண்டார். தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.