மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இது தொடர்பாக தாலுகா அளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் அங்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையம் மூலம் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1000 நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் நாளை முதல் SMS மூலம் 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும்.