திருநெல்வேலி மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சாத்தான்குளம் சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேசுகிறார். அந்த வழக்கில் அப்போதைய அரசு அதை வழக்கு பதிவு செய்யவே தயங்கி நின்றது.

ஆனால் திருப்புவனம் அஜித் குமார் விஷயத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தை நடத்திய கட்சித்தலைவருக்கு தெரியவில்லை.

எழுதிக் கொடுக்கும் வசனத்தை வாசித்து விட்டு செல்கிறார் தவெக  தலைவர் விஜய். அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்து வைத்ததே புஸ்ஸி ஆனந்த் தான்.

இன்றைக்கு வருமான வரி சோதனையை சரி செய்த புஸ்ஸி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி, வருமான வரி சோதனையை நடத்திய அதிகாரி அருண்ராஜ்க்கு பதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்தை யார் சொல்லி நடத்தினார்கள் என்பதே தெரியவில்லை. இதன் பின்னே அமித்ஷா இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர். அதனால் சிறுபான்மை வாக்குகளை வாங்குவதற்காக அவர் களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக தோன்றுகிறது என கூறியுள்ளார்