காசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன் அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். முன்னதாக இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3500 எட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. வான்வெளி தாக்குதலால் காசா நகரமே நிலைகுலைந்து இருக்கும் நிலையில்,

காசா நகரத்திலிருந்தும்,  காசா வடக்கு பகுதியில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஆயினும் காசா முழுவதுமே இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்,  இது தொடர்பாக பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடன்  பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி உள்ளார்.