இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இந்த முக்கியமான தருணத்தில் நான் இங்கு இருப்பதற்காக மனநிறைவு அடைகிறேன். பயங்கரவாதத்தின் பயங்கர செயலால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். நானும் இங்கிலாந்தும் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.

இஸ்ரேல் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். இது நிச்சயம் ஆக்கபூர்வமான சந்திப்பாக இருக்கும் என்பது உறுதி. இஸ்ரேலுக்கு நடக்கும் தீங்கிற்கு எதிராக உங்களுடன் நான் துணையாக இருப்பேன் இப்போதும் எப்போதும்” எனக் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.