ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிஜிட்டல் சேவைக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி பயனர் நடைமுறைகளை கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது, தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவாமல் தடுப்பது, சில பதிவுகளை கட்டுப்பாட்டு அமைப்புடன் பகிர்வது போன்ற விதிகள் உள்ளடங்கும்.

ஆனால் இந்த சட்டத்தால் எலான் மாஸ்க் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்தி விட முடிவு செய்து இருப்பதாக இன்சைடர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.