பிரதமர் மோடி அவர்கள் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் பேசியபோது காசாவில் தாக்குதலுக்கு உள்ளான அல் அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன்.

அப்போது பாலஸ்தீன பகுதிகளில் நடந்த வன்முறை பயங்கரவாதங்கள் குறித்து பகிர்ந்து கொண்டோம். இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து இந்தியா அனுப்பி வைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.