இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமே, ஐபோன் வாங்குவது என்பது ஒரு கனவாக இருக்கும். ஒரு காலத்தில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நூற்றில் ஒருவர். ஆனால், தற்போது பத்தில் ஒருவரிடம் ஐபோன் இருப்பதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐபோன்களை எத்தனை பேர் பயன்படுத்தினார்கள் என்பதை வேறுபடுத்தி காட்டியுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள், சிலர் தங்களது ஸ்டேட்டஸ் இமேஜை காட்ட, கடன் வாங்கி ஐபோன் வாங்குவதாக கமெண்ட் செய்துள்ளனர்.