இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படை ஹமாஸ் அமைப்பின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், அவர்களின் அலுவலகங்கள் என குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் வடக்கு பகுதியில் ராக்கெட்ரி என்று சொல்லப்படுக்க ஏவுகணை   தாக்குதல் நடத்தக்கூடிய பொறுப்பை கவனித்து வந்த தளபதியான ஹசன் அல்-அப்துல்லாவை குறித்த  முக்கியமான உளவு தகவல் என்பது கிடைத்ததாகவும்,

அதன்படி இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படைக்கு சொந்தமான வான் படையை சார்பாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் மற்ற சில முக்கிய ஹமாஸ்  படையை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலை இஸ்ரேல் உடைய பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் தற்போது அதற்கான வீடியோ காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். ஹமாஸ் அமைப்பினுடைய  முக்கிய தளபதிகள் பெரும்பாலும் பதுங்குழிகளுக்குள் புகுந்திருக்கிறார்கள். அங்கிருந்தபடி தான் அவர்களுடைய ஆபரேஷன் எல்லாம் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில்….  முக்கியமான காரணங்களுக்காக.. அவர்கள் அவ்வப்போது வெளியே வந்து காமாண்டிங் வேலை எல்லாம் செய்து வருகிறார்கள்.

அப்படி வெளியே வரக்கூடிய நபர்கள் விவரங்கள் குறித்து இஸ்ரேல் அமைப்பின் உடைய உளவுத்துறையினர் கூடுதலான தகவல்களை இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படைக்கு அவ்வப்போது வழங்கி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் தற்போது இந்த வான்வழி தாக்குதல் என்பது திட்டமிடப்பட்டதாகவும்,  எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் திட்டமிட்டபடி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு,  தளபதி கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல் நாடு.