உலகெங்கும் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் வேளையில் பெண் ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் பெட்ரோல் நிரப்பும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் நிலையத்தில் தனது காரில் வந்த அந்தப் பெண் பாதுகாப்பான கேன்கள் அல்லது பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் துணிச்சலாக மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் பெட்ரோலை நிரப்பி அதனைத் தனது காரின் பின்பகுதியில் வைத்துள்ளார்.
View this post on Instagram
பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதையும் பிளாஸ்டிக் பைகள் கசிந்தால் பெரும் வெடிவிபத்து ஏற்படும் என்பதையும் உணராமல் அந்தப் பெண் செய்த இந்த ஆபத்தான காரியம் அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்துள்ளது. ஒரு சிறிய தவறு நடந்திருந்தால் கூட அந்த இடமே போர்க்களமாக மாறியிருக்கும் என்பதால் இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
