சமூக வலைதளங்களில் ஒரு குட்டி குழந்தையின் வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி, பார்ப்பவர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், மறுபக்கம் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக வீட்டில் கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டால் குழந்தைகள் பயந்து போய் அழுவார்கள்.
Kid sneaks a stick to mom’s grip mid fiery mom-dad fight, both explode into laughter😂 pic.twitter.com/JlUVebmDNe
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 27, 2026
ஆனால், இந்த வீடியோவில் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த சிறு குழந்தை ஓடிச் சென்று ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து வந்து தனது தந்தையிடம் கொடுக்கிறது.
“இந்தாங்க.. இதால அடிங்க” என்பது போல அந்த மழலை செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ, அதையே பிரதிபலிப்பார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
“குழந்தை முன்னாடி சண்டை போடுறது எவ்வளவு ஆபத்து பார்த்தீங்களா?” என சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவைப் பார்த்து பெற்றோர்களைக் கண்டித்து வருகின்றனர்.
