கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை அனல் பறக்கும் ஆட்டத்திற்கு நடுவே, தமிழக அரசியலும் எட்டிப்பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய நிலையில், கேமராக்கள் மைதானத்தை சுழன்றபோது திடீரென தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடி அங்கு பறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உலகக்கோப்பை போட்டிகளில் கொடிகள் மற்றும் அரசியல் சின்னங்களைக் கொண்டு வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் எப்படி தவெக கொடியை உள்ளே கொண்டு வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே மலேசியாவில் நடந்த தவெக தொடர்பான ஒரு விழாவில் கொடி காட்டிய நபர் போலீசாரால் எச்சரிக்கப்பட்ட நிலையில், இப்போது இலங்கையிலும் இந்த சம்பவம் எதிரொலித்துள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தீயாய் பரவி வரும் நிலையில், “தளபதி ரசிகர்கள் எங்க போனாலும் கெத்து தான்” என ஒரு தரப்பினரும், “விதிமுறைகளை மீறலாமா?” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.