நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று நியூயார்க்கிற்கு வந்திருந்தனர். அவர்கள் கூட்டத்திற்குள் செல்லும் போது, நகரும் படிக்கட்டில் பயணம் செய்தனர். ஆனால், அச்சமயம் எஸ்கலேட்டர் திடீரென பழுதடைந்து நடுவில் நின்றுவிட்டது. மெலனியா ஹீல்ஸ் செருப்பு அணிந்திருந்ததால் அவர் நிலை தடுமாறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கீழே விழவில்லை.
ये अचानक हुआ क्या…ट्रंप का एस्केलेरेटर किसने रोका?
ट्रंप अपनी पत्नी और अमेरिका की फर्स्ट लेडी मेलानिया ट्रंप के साथ UN मुख्यालय में आ रहे थे तभी उनका एस्केलेटर खराब हो गया. गुस्साए ट्रंप ने UN को जिम्मेदार ठहराया, लेकिन बाद में खुलासा हुआ कि गलती उनकी ही टीम के वीडियोग्राफर की… pic.twitter.com/peSiSGCAnX
— NDTV India (@ndtvindia) September 24, 2025
இந்த சம்பவம் தற்போது அமெரிக்க அரசியல் மையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் ஆக இருக்குமா?” என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐ.நா. ஊழியர்கள் இத வேண்டும் என்றே செய்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
டிரம்ப் இதைப்பற்றி பேசியபோது, “மெலனியா அதிர்ஷ்டமாக சுதாரித்துக்கொண்டதால் கீழே விழவில்லை. நாங்கள் இப்போது மிகவும் வலிமையாக இருக்கிறோம்,” என்று தனது பாரம்பரிய பாணியில் நம்பிக்கை அளித்தார். ஆனால் இந்தக் கோர விபத்து சற்று நேரமாவது அவர்களது பயணத்தை பாதித்ததோ, தொலைக்காட்சிகளில் அதை பெரிதாக்கி காண்பித்ததோ தவிர, உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
இதே சந்திப்பின் போது இன்னொரு சம்பவமும் நடந்தது. டிரம்ப் ஐ.நா.சபை மன்றத்தில் உரையாற்றும் போது, அவரது முன் வைக்கப்பட்டிருந்த டெலி-பிராம்ப்டர் செயலிழந்தது. இருந்தாலும் அவர் தடுமாறாமல் உரையை தொடர்ந்தார். இது ஒரு பக்கம் அவரது முன்னோடியான பேச்சாற்றலுக்குப் புகழாக அமைந்தாலும், மற்றொரு பக்கம் “தொடர்ச்சியான முறைகேடுகள் ஏன்?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
