சீனாவில், ஒரு பெண் வெறும் 1 டாலருக்கு (சுமார் ₹85) வாடகைக்கு எடுத்த 40 சென்டிமீட்டர் அகலம் மட்டுமே கொண்ட மிகச் சிறிய ‘மினி-ரூம்’ ஒன்றைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறையில் ஒரு சிறிய படுக்கை, ஒரு பவர் சாக்கெட் மற்றும் சுவரில் பொருத்தப்பட்ட ஒரு டிவி மட்டுமே உள்ளது. இந்த அறையில் வேறு எதுவும் வைக்க இடமில்லை.
வேலை நிமித்தமாக அல்லது படிப்புக்காக வெளியே தங்கி, தூங்குவதற்கு மட்டுமே ஒரு இடம் தேடும் நபர்களுக்காக சீனாவில் உள்ள பல நகரங்களில் இதுபோன்ற ‘மினி-எண்ட் யூனிட்கள்’ வாடகைக்கு விடப்படுவதாக அந்தப் பெண் வீடியோவில் விளக்கியுள்ளார்.
In China, 40 cm-wide “mini-end” units are rented for just one dollar, offering only a tiny bed, a power outlet, and a wall-mounted TV.
— Science girl (@sciencegirl) November 24, 2025
இந்த அறை அவ்வளவு சிறியதாக இருப்பதால், ஒருவரால் நிற்கக்கூட முடியாது, மேலும் சுவர்களுக்கு நடுவில் படுக்கை சரியாகப் பொருந்தியுள்ளதால், படுக்கையில் ஒரு பக்கமாகத் திரும்பிக்கூடப் படுக்க முடியாது என்று தெரிகிறது.
இந்த அறைக்குக் கழிவறை, குளியலறை எதுவும் கிடையாது, அவை வெளியில்தான் பொதுவில் பயன்படுத்த வேண்டும். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது அறை அல்ல, இது ஒரு சவப்பெட்டி (Coffin) போல இருக்கிறது” என்றும், “இதில் எப்படித் தூங்குவது?” என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
