பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ (Epstein Files) விவகாரத்தில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. எப்ஸ்டீன் தனது பண்ணை வீட்டில் வைப்பதற்காக, விவிலியக் கதையை மையமாகக் கொண்ட “The Massacre of the Innocents” (மாசுக்கற்ற குழந்தைகளின் படுகொலை) என்ற ஓவியத்தின் பிரம்மாண்ட மறுபதிப்பை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
இந்த ஓவியத்தில் ரோமானிய வீரர்கள் பச்சிளம் குழந்தைகளை அவர்களது தாயின் மடியிலிருந்து பறித்துக் கொலை செய்யும் கொடூரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எப்ஸ்டீனின் உதவியாளர் ஒரு ஊழியருக்கு அனுப்பிய இமெயிலில், “குழந்தைகளைக் கொல்லும் அந்த 9 அடி நீள ஓவியத்தை ஃபெடெக்ஸ் மூலம் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வை” என்று குறிப்பிட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே எப்ஸ்டீன் மீது “குழந்தைகள் பண்ணை” மற்றும் சடங்கு ரீதியான கொலைகள் குறித்த உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் நிலவி வரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான ஓவியத்தை அவர் தனது வீட்டு வாசலில் வைத்திருந்தது அவரது ‘மனநோயாளி’ ரசனையைக் காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
