சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஸ்டண்ட் வீடியோக்கள் உலா வந்தாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அறிவியலின் விதிகளைப் பொய்யாக்குவது போலவும், பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதாகவும் அமைந்துள்ளது.
திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கக்கூடிய அதிரடி காட்சிகளை மிஞ்சும் வகையில், நபர் ஒருவர் தனது ஆஃப்-ரோடு (Off-roading) காரை மிகச் செங்குத்தான மலைப்பாறை ஒன்றின் முன் நிறுத்துகிறார். அடுத்த நொடியே காரின் இன்ஜின் கர்ஜிக்க, புவிஈர்ப்பு விசையைத் தூக்கியெறிந்து விட்டு, அந்த மலைப்பாறையின் உச்சிக்கே கார் சீறிப்பாய்கிறது.
சிறிது கூடப் பின்னோக்கிச் சரியாமலும், சமநிலை தவறாமலும் கார் மலையேறிய விதம், காண்போரை ஆச்சரியத்தில் உறைந்து போகச் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் @rockcrawldaily என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் (Likes) இது பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
“நிச்சயமாக இவர்தான் உண்மையான ‘ஹெவி டிரைவர்’ (Heavy Driver)” என்று ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
View this post on Instagram
“அறிவியலின் புவிஈர்ப்பு விசைக்கு இன்று விடுமுறை போலிருக்கிறது” என மற்றொருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
“இது காரின் பலம் மட்டுமல்ல, ஓட்டுநரின் துணிச்சலான மனதிற்குச் சான்று” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இது பார்ப்பதற்குப் பரவசமாக இருந்தாலும், முறையான பயிற்சியும் பாதுகாப்புக் கருவிகளும் இன்றி இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட்களைப் பொதுமக்கள் யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
