இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது, ராகுல் அணிந்திருந்த கையுறைகளை கவனித்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.

பொதுவாக விக்கெட் கீப்பர்கள் இரண்டு கைகளிலும் ஒரே நிறத்திலான கையுறைகளையே அணிவார்கள். ஆனால் ராகுலோ, இடது கையில் ஆரஞ்சு நிறத்திலும், வலது கையில் நீல நிறத்திலும் என ‘மிஸ்மேட்ச்’ (Mismatched) கையுறைகளை அணிந்து களமிறங்கினார்.

இதைப் பார்த்த வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “இது ராகுலின் ஸ்டைலா? அல்லது கிட் பேக்கில் கையுறைகள் மாறி வந்துவிட்டதா?” என நேரலையிலேயே கேள்வி எழுப்பினார்.

ராகுலின் இந்த விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. சிலர் இது ஏதோ ஒரு புதிய சென்டிமென்ட் அல்லது விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், ராகுல் திராவிடைப் போல விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்று அசத்தி வரும் வேளையில், அவரது இந்த ‘கலர்ஃபுல்’ கையுறைகள் கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பெரிய ‘மிஸ்டரி’யாக மாறியுள்ளது.