வதோதராவில் கட்டப்பட்டுள்ள புதிய பிசிஏ மைதானத்தில் நேற்று முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் வகையில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால், அந்த விழா நடத்தப்பட்ட விதம் தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.
மைதானத்தின் ஓரத்தில் இருவரது உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய மர பீரோ (Cupboard) வைக்கப்பட்டிருந்தது. இடைவேளையின் போது, திடீரென அந்த பீரோவின் கதவுகள் திறக்கப்பட, அதற்குள்ளிருந்து கோலியும் ரோஹித்தும் ‘சர்ப்ரைஸ்’ கொடுத்தபடி வெளியே வந்தனர்.
Kohli and Rohit were trying to exit through the back door, but someone opened the front door instead 😂❤️pic.twitter.com/OtlVMDRvCh
— Suprvirat (@Mostlykohli) January 12, 2026
இதைப் பார்த்த ரசிகர்கள், “இது என்ன அன்-பாக்ஸிங் (Unboxing) விழாவா?” என கிண்டலடித்து வருகின்றனர். அங்கிருந்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் இந்த வினோத நிகழ்வைப் பார்த்துச் சிரித்தனர்.
கோலியும், ரோஹித்தும் கூட இந்த ஐடியாவைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல், அந்த பீரோவில் கையெழுத்திட்டுத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த ‘பீரோ’ வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
