ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினார். அதிரடியாக விளையாட வேண்டிய டி20 போட்டியில் அவர் நிதானம் காட்டியது அணி நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மெல்போர்ன் அணி 18 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்திருந்தபோது, களத்தில் இருந்த ரிஸ்வானை வெளியேறுமாறு அந்த அணியின் கேப்டன் சைகை காட்டினார். 20 ஓவர் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடிய மற்ற வீரர்கள் களம் இறங்க வேண்டும் என்பதற்காக, ரிஸ்வான் ‘ரிட்டையர் அவுட்’ முறையில் வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியேறிய பிறகு கடைசி 2 ஓவர்களில் மெல்போர்ன் அணி 16 ரன்களைச் சேர்த்தது. ஒரு சர்வதேச நட்சத்திர வீரரை, அதிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஒருவரை இப்படி ‘வெளியே போ’ எனச் சைகை காட்டி அழைத்தது பாகிஸ்தான் ரசிகர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது. “இது பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் செயல்” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.