அலபாமாவைச் (Alabama) சேர்ந்த ஜேசன் ஹட்சன் (Jason Hudson) என்ற 48 வயது மதிக்கத்தக்க நபருக்கு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்காக (Child Sex Crime) நவம்பர் 19, 2025 அன்று, 965 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு, ஓரினப் புணர்ச்சி, உறவுமுறையாளர் பாலியல் வன்கொடுமை (Incest) மற்றும் குழந்தைகள் பாலியல் ஆபாசப் படங்களைத் தயாரித்தல்/வைத்திருத்தல் உட்பட 84 குற்றச்சாட்டுகளில் ஜூரி அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
தகவல் பகிர்வுத் தளங்களில் ஹட்சன் டவுன்லோட் செய்த குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (Child sex abuse material) குறித்த எச்சரிக்கைகள் தேசிய காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகள் மையத்தை (NCMEC) அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், 2 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உட்படச் சிறுவர்கள் சாட்டைகள், நெருப்பு மற்றும் கயிறுகள் ஆகியவற்றால் பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானப் படங்களையும் வீடியோக்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஹட்சனின் மனைவி, ஃபாரன் ஜில் ஹட்சன் (Farren Jill Hudson), 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கின் ஆதாரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை என்று மாவட்ட வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
