பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான சிகிச்சை முறையை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்களை அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு டாக்டர் என்று கூறப்படும் நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமான மற்றொரு நபருக்கு சிகிச்சை செய்ய, பாரம்பரிய மருத்துவ முறைகளை விடுத்து, தனது அழுக்கு கால்களால் கொதிக்கும் எண்ணெயை தொட்டு, மற்றொரு நபரின் உடலில் தேய்க்கிறார்.
இந்த விசித்திர சிகிச்சையைப் பார்த்து, சிலர் இதை ‘மந்திர சிகிச்சை’ என்று கிண்டல் செய்ய, பலர் இதை ஆபத்தான மற்றும் முட்டாள்தனமான செயல் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
A man in Pakistan suffered a stroke and got paralyzed.
Pakistani Doctor touched boiling oil with his dirty feet and rubbed his feet on the patient’s body.
The patient miraculously recovered and even lifted the bucket of water after a year.
Soon, you will find such hospitals in… pic.twitter.com/uNyO0EeSG1
— Incognito (@Incognito_qfs) September 12, 2025
வீடியோவில், முடமாகி படுக்கையில் இருக்கும் ஒரு நபருக்கு, அந்த நபர் தனது கால்களால் கொதிக்கும் எண்ணெயை எடுத்து, அவரது கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களில் தேய்க்கிறார். பின்னர், அவர் அந்த நபரை தண்ணீர் வாளி எடுக்கச் சொல்கிறார், அவர் அதை எளிதாக செய்கிறார்,
இது ஒரு ‘அற்புத குணமாக்கல்’ என்று அந்த நபர் கூறுகிறார். இந்த வீடியோ எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு, “பாகிஸ்தானில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு முடமானார். டாக்டர் தனது அழுக்கு கால்களால் எண்ணெயை தேய்த்து, ஒரு வருடத்தில் அவர் குணமாகி வாளியை தூக்கினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த பயனர்கள், “இதுதான் சிகிச்சையா? மருத்துவ கல்லூரிகள் தேவையில்லை!” என்றும், “மருத்துவத்தை கேலி செய்யும் இந்த செயல் ஆபத்தானது,” என்றும் கடுமையாக விமர்சித்து, தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
