சமூக வலைத்தளங்களில் தற்போது இரண்டு சிறுவர்கள் ஒரு சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், “உண்மையான சகோதரத்துவம் (Brotherhood) என்றால் இதுதான்” என்று பாராட்டுகின்றனர்.
கார் ஒன்றில் பயணித்த நபர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். அதில், ஒரு சிறுவன் சைக்கிள் சீட்டில் அமர்ந்து ஹேண்டிலைப் (Handle) பிடித்துச் செலுத்துகிறான்.
View this post on Instagram
மற்றொரு சிறுவன் கீழே நின்றவாறு, ஒரு காலை மட்டும் பெடலில் (Pedal) வைத்து, சமநிலைப்படுத்திச் சைக்கிளை மிதித்து ஓட்டிச் செல்கிறான்.
ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு காரணமாகவே அவர்கள் இப்படிச் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதான்!”, “ஒருவர் ஹேண்டிலைப் பார்க்கிறார், மற்றவர் பெடலைப் பார்க்கிறார்!” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
