இலூதியானா: ஜாலந்தர் பைபாஸ் பகுதியில், சாலையில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த நாயை கறுப்பு நிற தார் கார் மூலம், அதன் மீது காரை நிறுத்திய மனிதரின் கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கும் இந்த காணொளியில், நாய் காரின் டயருக்குக் கீழ் சிக்கி சாகும் வரை அழுந்தி கிடந்தது தெளிவாக காணப்படுகிறது. ஆனால் அதில் சற்றும் மனவேதனை இல்லாமல், அந்த நபர் ஜிம்முக்கு சென்று விட்டதைப் பார்க்க முடிகிறது.
பின்னர், ஐந்து முதல் ஏழு பேர் வரை காரின் சாவியை கொண்டு வந்து வாகனத்தை அங்கிருந்து நகர்த்தியதாகவும், நாயின் உடலை அப்படியே விட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
Ludhiana,हैवान् ने कुत्ते को गाड़ी से कुचल दिया और वही तड़फता छोड़ के जिम चला गया बॉडी बनाने😡कमीने को इतना रेहम नहीं की पहले बच्चे को नीचे से निकाल दे, @SupremeCourtIND देखिये इंसान कितना खतरनाक है @LudhianaRange @Ludhiana_Police @LudhianaDEO @DGPPunjabPolice सख्त सजा दीजिये🙏 pic.twitter.com/dYniRyk6b4
— voiceforanimals11 (@vfanimals11) September 25, 2025
இந்த மனிதாபிமானமற்ற செயல், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பி, “இது போன்ற கொடூரமான செயலை புரிந்தவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனாலும், தற்போது வரை அந்த நபருக்கு எதிராக எந்தவொரு காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் சோகம் அளிக்கிறது.
இந்த சம்பவம் மூலம், மக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கிடையேயான பாதுகாப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதென வலியுறுத்தப்படுகிறது.
