உத்தரப் பிரதேசம், மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ அலட்சியம் குறித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இரண்டரை வயதுக் குழந்தை ஒன்றின் கண் அருகே இருந்த ஆழமான காயத்திற்கு, தையல் போடுவதற்குப் பதிலாக, மருத்துவர் ஒருவர் ஃபெவிகியூக் (Fevikwik) என்ற அதிவேக ஒட்டும் பசையைப் (Adhesive) பயன்படுத்தியுள்ளார்.

காயம் மற்றும் வலி அதிகரித்ததால் கவலை அடைந்த குழந்தையின் பெற்றோர், அக்குழந்தையை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மூன்று மணி நேரம் போராடி, ஒட்டப்பட்டிருந்த அந்த வலிமையான பசையை நீக்கினர்.

இதுகுறித்து, குழந்தையின் தாய் இர்வின் கவுர், “பாகேஷ்ரி மருத்துவமனையில் (Bhageshri Hospital) மருத்துவர்கள் குழந்தையைக் காயத்தைக் கழுவாமலே அதன் மீது ஃபெவிகியூக்கை ஒட்டினர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தற்போதுச் சுகாதாரத் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.