ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் (Srikakulam) மாவட்டத்தில், பாக்ஷியலட்சுமி என்ற தாய், தனது மகள் மவுனிகாவை (Maunika) கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மவுனிகா பருவம் அடைந்ததிலிருந்தே பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே அடைத்து வைத்துத் துன்புறுத்தி வந்துள்ளார். பாக்ஷியலட்சுமி வெளியில் செல்லும்போது, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டைப் பூட்டிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர் மூலம் தகவல் அறிந்த போலீசார், அந்தச் சிறுமியை மீட்டனர். தனிமைச் சிறையில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தாய்க்கு ஆலோசனையும் (Counseling) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பாதுகாப்பு உரிமை மறுக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.