மும்பையின் பரபரப்பான லோக்கல் ரயிலில் மதியம் ஒரு பாட்டி ஏறுவதைப் பார்த்த பயணி ஒருவர், அவரிடம் பேசத் தொடங்கினார். அந்த உரையாடலின் போதுதான் அந்த பாட்டியின் பெயர் கமலாபென் மேத்தா என்பதும், அவருக்கு 89 வயது என்பதும் தெரிய வந்தது.
இந்த வயதிலும் ஏன் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, “நான் என் குடும்பத்துடன் தங்குவதற்கு அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும், அதற்காகத்தான் வளையல்களை விற்கிறேன்” என்று மிக நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
View this post on Instagram
நாலாசோப்பாராவில் வசிக்கும் கமலாபென், கடந்த 60 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். திருமணமாகி ஒரே மாதத்தில் தனது கணவரை (ஒரு பூசாரி) இழந்தவர். அன்று முதல் இன்று வரை யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்து வருகிறார்.
தனது குடும்பத்திற்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனது வீட்டு முகவரியைத் தர அவர் மறுத்துவிட்டார். இந்த தள்ளாத வயதிலும் யாரிடமும் பிச்சை எடுக்காமல் உழைக்கும் அவரின் மனவலிமை இணையத்தைக் கட்டிப்போட்டுள்ளது.
