கோவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி, தனது அரசியல் பயணத்தில் உதவியவர்களையே புறக்கணித்தவர் என்று குற்றம்சாட்டிய அவர், “நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு? எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்க வேண்டாம்” என்று காட்டமாக பதிலளித்தார்.
மேலும், எடப்பாடி எம்.ஜி.ஆர். படத்தை பாக்கெட்டில் வைக்கக் கூட பயப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி வலுவானதா, பலவீனமானதா, அல்லது முற்றிலும் தோல்வியடையுமா? என்பதை ஜோதிடம் கூட கணிக்க முடியாது என்று அமைச்சர் வேலு கிண்டலடித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவின் வலுவான கூட்டணி மற்றும் தலைமை, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றியை ஈட்டும் எனவும் அவர் உறுதியாகக் கூறினார்.
