செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, ஒன்னு பிரிஞ்சிக்கோங்க… எல்லாரும் என்ன புரிஞ்சி வச்சி இருக்காங்கன்னா…. இதுக்கு முன்னாடி தேசிய மகளிர் ஆணையம் ( National Commission for Women) பற்றி தமிழ்நாட்டில் யாருமே பேசவில்லை. என்னைக்கு குஷ்பூ தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் ஆனாரோ, அன்னையில் இருந்து தமிழ்நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் பற்றி பேச ஆரம்பிச்சி இருக்கீங்க.

தேசிய மகளிர் ஆணையம் என்பது போலீஸ் கிடையாது.  எங்களுக்கு ஒரு கம்ப்ளைன்ட் பண்ணனும். .  அப்பதான் ஆக்சன் எடுக்க முடியும். திரிஷா விவகாரத்தில் யாருமே தானா கம்ப்ளைன்ட் எடுக்கல. நான் குரல் கொடுக்கவில்லை. கம்பளைண்ட்  எழுதி வந்தது,  அப்பதான் நாங்க ஆக்சன் எடுத்தோம்.

சேரி விவகாரத்தில் எனக்காக யாரோ ஒருத்த கம்ப்ளைன்ட் கொடுத்தாங்கன்னா….  என்ன விசாரணைக்கு கூப்பிடுங்கன்னு நான் சொல்லி இருக்கிறேன்… நான் பார்க்காத வழக்கா ? பாரதிய ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லும்  காயத்ரி ரகுராம் அவர்களிடமே கேளுங்கள். அவுங்க கம்பளைண்ட் கொடுக்கவலையே.. காயத்ரி ரகுராம் NCWவில் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களா ? திரிஷா விஷயத்தில்  எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு.

எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்தது. கம்ப்ளைன்ட் வந்தத பிறகு தான் ஆக்சன் எடுக்க முடியும்.  ரோஜா ஆந்திர பிரதேசத்தில் மந்திரியாக இருக்காங்க. ஆனால்  அவங்களுக்கு எதிராக தெலுங்கு தேச எம்எல்ஏ பேசும்போது……  முன்னாள் மந்திரி பேசும்போது…..  அவங்க எங்களுக்கு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தாங்க. அதுக்கு நாங்க ஆக்சன் எடுத்திருக்கிறோம். ஏன் ரோஜா பத்தி யாரும் கேட்கிறதில்லை? என தெரிவித்தார்.