இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஆற்றின் அருகே பல இளைஞர்கள் அமர்ந்திருக்கின்றனர். இந்நிலையில் ஒரு இளைஞர் அங்குள்ள தரையில் தலைகீழாக குதித்து சாகசம் செய்கிறார்.

 

அப்போது அவரது அருகில் நின்ற 2 தெரு நாய்கள் வெறியாகி அவரை கடிக்க முயற்சி செய்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறார். ஆனால் அந்த 2 நாய்களில் ஒரு நாய் அந்த இளைஞரின் கால்களை கடிக்க முன் வருகிறது, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.