சமூக வலைதளங்களில் ஒரு பைக் விபத்து வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பைக் லாரியை முந்திச் செல்ல முயன்று, சாலையின் இடதுபுறம் உள்ள மணல் பாதையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்கிறது. இதில் பைக்கில் இருந்த ஆணும் பெண்ணும் கீழே விழுந்து உருளும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியாவில் வண்டி வாங்குவதற்கு முன்பே டிரைவிங் லைசென்ஸ் (DL) கட்டாயமாக்கப்பட வேண்டும்” என விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
Driving Licence should be mandatory for buying a vehicle all over India pic.twitter.com/C1KA7oNv81
— 🚨Indian Gems (@IndianGems_) January 13, 2026
ஆனால், அதே சமயம் இந்த வீடியோவைப் பலமுறை கவனித்த சிலர், இது நிஜமான விபத்து அல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ எனச் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
வண்டி தடுமாறும் விதம் மற்றும் விழுந்த பிறகு உடல் அசைவுகள் ‘நேச்சுரலாக’ இல்லை என்பதே இவர்களின் வாதம். அதேநேரம், “இந்தியாவில் லைசென்ஸ் பெறுவது எளிது, வண்டி வாங்குவதுதான் கடினம்” என நம் ஊர் போக்குவரத்து விதிகளைக் கிண்டல் செய்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ எங்கெடுத்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்றாலும், சாலை விதிகளை மதிக்கத் தவறுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
