மும்பை இந்தியன்ஸ் அணியின் 300-வது டி20 போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது. ஆனால், போட்டியின் தொடக்கத்திலேயே ‘டாஸ்’ விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. டாஸ் சுண்டப்பட்ட போது கேமரா கோணம் மாற்றப்பட்டதும், மேட்ச் ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத் காயினை உடனடியாக கையில் எடுத்ததும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
Hardik Pandya flicks the coins and camera moved away and didn't show whether it was head or tail and Mumbai Indians won the toss.😂pic.twitter.com/Gg9qFHBsrZ
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 29, 2026
கேகேஆர் கேப்டன் அஜிங்கியா ரஹானே ‘டெய்ல்ஸ்’ என்று கேட்ட நிலையில், காயின் விழுந்த இடத்தை ஜூம் செய்து காட்டாமலேயே ஹர்திக் பாண்டியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2024 ஐபிஎல் தொடரிலும் மும்பை அணி மீது இதே போன்ற புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் அதே சர்ச்சை வெடித்துள்ளது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
