ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி எளிதாக ஜெயித்தாலும், சமூக வலைதளங்களில் ‘மேட்ச் பிக்ஸிங்’ புகார்கள் எழுந்துள்ளன.

ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் விராட் கோலி கொடுத்த கேட்சை ஹென்ரிக் கிளாசன் தவறவிட்டதுதான் இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம். ​கிளாசன் வேண்டும் என்றே அந்த கேட்சை விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கிளாசன் பேட்டிங் செய்தபோது அவர் அவுட் ஆன விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பவுண்டரி கோட்டில் கேட்ச் பிடிக்கப்பட்டபோது, வீரரின் கால் கயிற்றில் பட்டது போலத் தெரிந்தும் மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது ஹைதராபாத் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய பஞ்சாயத்து வெடித்திருப்பது ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.