மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்று வந்த ராசியை உடைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன் அஜின்கியா ரஹானே 67 ரன்கள் குவித்து அதிரடி காட்டினாலும், பீல்டிங்கின் போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு (Cramps) காரணமாக மைதானத்திலேயே படுத்து வலியால் துடித்தார்.

​ரஹானே நடக்க முடியாமல் தவித்தபடி வெளியேறியபோது, மும்பை வீரர் ரோஹித் ஷர்மா அவரை ஜாலியாக கிண்டல் செய்து சிரிக்க வைத்தார். வலியிலும் ரஹானே சிரித்ததோடு, ரோஹித் அவரை பாசத்துடன் கட்டிப்பிடித்து வழி அனுப்பி வைத்தார். ரஹானே வெளியேறிய பின் ரிங்கு சிங் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். மும்பையைச் சேர்ந்த பழைய நண்பர்களான ரோஹித் மற்றும் ரஹானேவின் இந்த நட்பு கலந்த குறும்புகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.