உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் திறந்து வரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது மற்றும் பயனர்களுக்கு HD புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்வது மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் call மியூட் செய்யும் வசதி என பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஐபோன் பயனர்கள் எப்படி HD புகைப்படங்களை பயனர்களுக்கு பகிர வேண்டும் என்பது குறித்து அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • இத்தகு முதலில் + என்கிற ஐகானை திறந்து கேலரியில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து whatsapp திரையில் HD ஐகான் செலக்ட் செய்து பயனர்களுக்கு HD புகைப்படத்தினை அனுப்பலாம்.
  • எந்தவொரு புகைப்படத்தினையும் 4000×3000 பிக்சல்களாக whatsapp செயலியின் மூலமாகவே நேரடியாக பயனர்களுக்கு அனுப்பலாம்.
  • இந்த அம்சத்தை பெற ஐபோன் பயனர்கள் உடனடியாக வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.