கூகுள் நிறுவனம் தன்னுடைய இமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செயல்படாத gmail கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாத மற்றும் உள்நுழையாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணையதள பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்ட நிலையில் செயலற்ற கணக்குகளை நீக்குவது டிசம்பர் மாதம் 2023 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை பயனர்கள் உடனே சரி செய்து அதன் சேவைகளை தொடங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.