இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. என்னதான் மக்கள் அதிக அளவு செல்போனை பயன்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் அது நல்லதாக இருந்தாலும் மறுபக்கம் சில ஆபத்துகளும் செல்போன்களால் ஏற்படுகின்றன. அதாவது சமீபகாலமாக செல்போன் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜில் உள்ள போனை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

உறங்கும் போது போனை அருகில் வைத்துக் கொள்வதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்பிள் ஐபோனை நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களில் வைத்து சார்ஜிங் செய்ய வேண்டும் என்றும் சார்ஜில் இருக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம் எனவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.