“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற பழமொழி சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை உண்மையாகியுள்ளது. ஒரு சிசிடிவி காணொளி இப்போது வேகமாகப் பரவி வருகிறது, இதைப் பார்க்கும் இணையப் பயனர்கள் இதை ‘உடனடி கர்மாவின் பலன்’ (Instant Karma) என்று கூறுகிறார்கள். அதாவது, ஒருவர் செய்யும் தவறுக்கான பலன் அவருக்கு அந்த இடத்திலேயே உடனடியாகக் கிடைக்கிறது என்பதைக் காட்டுகிறது இந்தக் காணொளி.
சுமார் 28 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில், ஒரு கட்டிடத்திலிருந்து வெளியே வரும் ஒருவர், அருகில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் ஒரு நாயைக் காரணமின்றித் தாக்க ஓடுகிறார். ஆனால், அவர் நாயை நோக்கி ஓடும்போது, அருகில் இருந்த மேடை போன்ற ஒன்றில் கால் தவறி, தலைக்குப்புறக் கீழே சாலையில் பலமாக விழுந்துவிடுகிறார். இதனால் அவரது முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்படுகிறது.
कलियुग किसे कहते है,
देखो इस वीडियो को।Instant "K A R M A" pic.twitter.com/NDqq5SCFRk
— Madhuri (@IamMadhuri_) November 24, 2025
கீழே விழுந்த உடனேயே அவர் தனது உள்ளங்கையைத் தடவிப் பார்க்கிறார், இது அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. மொத்தத்தில், அமைதியாக இருந்த ஒரு நாயைத் தேவையின்றித் தொந்தரவு செய்ய முயன்றதற்கான பலனை அவருக்கு உடனடியாகக் கிடைத்தது. இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் கெட்ட செயலுக்குக் கிடைக்கும் கெட்ட பலன்” என்றும், “மூக்கெல்லாம் உடைந்து போயிருக்கும், அவ்வளவு வேகமாகக் கீழே விழுந்துவிட்டார்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
