சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் தன் ஆசிரியருடன் செய்யும் ஒரு குறும்பான மற்றும் கியூட்டான செயல் வீடியோவாக வெளியாகி, இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த இந்த வீடியோவைப் பற்றிப் பலரும், “இதுதான் உலகின் சிறந்த இன்ஸ்டாகிராம் ரீல்” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
அர்பிதா ஹூகர் (@arpita_lucky) என்ற ஆசிரியை தனது வகுப்பறையில் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைச் சரிபார்க்கும் போது இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடுத்த மாணவனின் நோட்டை வாங்குவதற்காக ஆசிரியை கையை நீட்டும்போது, அந்தச் சிறுவன் நோட்டைத் தராமல், தன் இரு கைகளால் இதயம் போன்ற வடிவத்தை (Heart Shape) உருவாக்கிக் காட்டியுள்ளான்.
சிறுவனின் இந்தச் சேட்டையைப் பார்த்த ஆசிரியை, செல்லமாக அவனை லேசாகத் தட்டிவிட்டுள்ளார். இந்தச் சிறிய மற்றும் ரசிக்கத்தக்க தருணத்தைப் பலரும் ‘ரொம்பவே கியூட்’ என்று பாராட்டி வருகின்றனர்.
பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் இடையே உள்ள அன்பான பிணைப்பை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாகப் பல பயனர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
