உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது..

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023 உலகக் கோப்பை போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.. அதேநேரத்தில் கடந்த 2 போட்டிகளில் டெங்குவால் ஆடாத சுப்மன் கில் இடம்பெற்றுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. கில் இடம்பெற்றுள்ளதால் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும். அதே நேரத்தில் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை கூட வெல்லவில்லை.

எனவே அந்த வரலாற்றை மாற்றி எழுத பாகிஸ்தான் இன்று போராடும். அதேசமயம் சொந்த மண்ணில் உலக கோப்பையில் 8வது முறை பாகிஸ்தான வீழ்த்தி, அந்த சாதனையை அப்படியே தொடர இந்தியாவும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்த போட்டியை பார்க்க 1லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். மைதானம் நிரம்பி வழிகிறது. இந்த போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானம் மட்டுமின்றி அகமதாபாத் முழுவதும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 11,000 மேற்பட்டோர்  அகமதாபாத் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா (து.கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான் (து.கே), இமாம் உல் ஹக் , அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவூப் , ஹசன் அலி , ஷஹீன் அப்ரிடி,