ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் (869 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை (859 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளினார்.

சில நாட்களுக்கு முன்பு வரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அஸ்வின் ஒரே புள்ளியில் முதலிடத்தில் இருந்தனர். மேலும் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அஸ்வின் முன்னேறி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.