இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனால் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இதனால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கராச்சி முழுவதும் இந்த விபரீதம் நடைபெற்று உள்ளது. மீட்பு படை அதிகாரிகள் இந்த செயலுக்கு கண்டம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது என்று தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
