அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் கொள்முதல் விலையை அதிகப்பட்சமாக கொழுப்பு சதவீதம் 5.9 % இதர சத்துக்கள் 9.0 % உள்ள பாலுக்கு 40 ரூபாய் 95 காசுகள் உயர்த்தி வழங்கி வழங்கப்படும் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்க பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களின் பால் மாதிரிகளை சோதனை செய்தபோது, அதில் 6% மேல் கொழுப்பு சத்து இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், அதில் அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து,

தற்போது உச்சபட்சமாக வழங்கப்பட்ட விலையிலே தரம் பிரித்து அதன் அடிப்படையில் 6.0 , 6.1, 6.2, 7.5 என தரவரிசைபடுத்தி அதிகபட்சமாக7 ரூபாய்5  வரை  பால் கொள்முதல் விலைபட்டியல்  விரிவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.