செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும். இனி பத்தாயிரம் ரூபாய்க்கு பதில் ரூ.12,500 மாத சம்பளம் வழங்கப்படும். 10,00,000 ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை தொடந்து போராட்டம் நடத்து ஆசிரியர் சங்கம் செய்தியாளர்களை சந்தித்தது. முழு நேர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தல் பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜேசுராஜா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். 2500 ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீட்டு அறிவிப்புக்கு நன்றி. பகுதி நேரம் என்ற நிலையிலிருந்து மாற்றி அடுத்த நிலைக்கு முழு நேரம் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும்.எங்களது போராட்டத்தை இன்னும் வலுப்பெற்று மிக தீவிரமாக நடத்துவோம்.அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை. எனவே  எங்களது போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.