செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று முதலமைச்சர் கவனத்தில் கொண்டு   செல்லப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12,500 ஆக உயர்த்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 10  லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகையை தமிழக அரசே செலுத்தும். ஆசிரியர்கள் போராட்டம் குறித்த தகவல்களை முதலமைச்சர் கேட்டு அறிந்து கொண்டே தான் இருக்கிறார். ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜேசுராஜா, அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கவில்லை. எங்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவார்கள் என்கின்ற நம்பிக்கையோடு இந்த போராட்ட களத்திலேயே காத்திருக்கின்றோம். போராட்டம் தொடரும்.181 தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது.

சொன்னதை செய்வார் என்ற தமிழக முதல்வரின் வாக்கு பொய்க்காது என்று நாங்களும் நம்புகின்றோம்.  நிதிநிலை என்று சொல்கின்ற காரணத்தினால் தான் அடுத்த நிலைக்கு எங்களை முழு நேர ஆசிரியர்களாக  மாற்றி சமுதாயத்தில் எங்களுக்கு ஒரு மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அந்த முழு நேர ஆசிரியர் ஆக்குவதற்கான மறுப்பு தெரிவிக்கின்றார்.

எனவே இவர்கள் மீதான  நம்பிக்கையை பொய்த்துவிடும் போல் இருக்கிறது.  எங்களுக்கு முழு நேர பணி அறிவிக்க வேண்டும். பகுதி நேரம் என்ற நிலையிலிருந்து மாற்றி அடுத்த நிலைக்கு முழு நேர பணி வழங்கப்பட வேண்டும். அது ஓராண்டு கால தற்காலிக தீர்வாக இருக்கப்பட வேண்டும்.  ஓராண்டுக்கு பிறகு அவர்கள் பணி நிரந்தரம் என்ற நிலையை அடைய வைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.