சவுதி அரேபியா தனது பொருளாதார மாற்றங்களுக்காக முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மதுபானம் விற்பதற்கான விதிகளை மேலும் தளர்த்தியுள்ளது.
மாத வருமானம் 50,000 ரியாலுக்கு ($13,300) அதிகமாக உள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியாத்தில் (Riyadh) உள்ள ஒரே மதுபானக் கடைக்குள் நுழைய, வெளிநாட்டுப் பயணிகள் அல்லது குடியிருப்பாளர்கள் தங்கள் வருமானச் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் கடையில் வாடிக்கையாளர்கள், மாதாந்திரப் புள்ளி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையின் (Monthly point-based allowance system) கீழ் மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும்.
இந்த மாற்றம் குறித்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகாதபோதும், இந்தச் செய்தி சவுதி அரேபியாவின் விதிமுறைத் தளர்த்தல் நடவடிக்கைகளில் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.
