அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் (Robert F. Kennedy Jr), 71 வயதிலும் ரீகன் தேசிய விமான நிலையத்தில் (Reagan National Airport) சாதாரணமாக நின்று 20 புல்-அப்களை (Pull-ups) செய்து அங்கிருந்தப் பயணிகள் மற்றும் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தினார்.
புல்-அப் பார் அருகே வந்த கென்னடி, சட்டையைத் தளர்த்திக் கொண்டு ஒன்றுக்குப் பின் ஒன்றாக புல்-அப்களைச் செய்யத் தொடங்கியதும், அங்கிருந்தப் பயணிகள் எண்ணத் தொடங்கினர்.
🚨🇺🇸 RFK JR. DOING 20 PULL-UPS AT 71 IS THE MOST HEALTH SECRETARY THING EVER
Bobby Kennedy just turned DCA airport into a CrossFit box.
Twenty pull-ups. Seventy-one years old.
Transportation Secretary Sean Duffy jumped in too and knocked out 10.
Not bad, but RFK has over two… pic.twitter.com/xvhdxuZ4N2
— Mario Nawfal (@MarioNawfal) December 8, 2025
அவர் 20 புல்-அப்களை முடித்தபோது, இந்தப் புல்-அப்கள் வீடியோ சமூக வலைத்தளங்களில் உடனடியாக வைரலானது. ட்ரம்ப் நிர்வாகம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ‘பயணத்தை குடும்பங்களுக்கு ஏற்றதாக மாற்றுதல்’ (Make Travel Family Friendly Again) என்ற புதியத் திட்டத்தைத் தொடங்குவதற்குச் சற்று முன்பு இந்தச் சம்பவம் நடந்தது.
இது குறித்துப் பேசிய கென்னடி, விமான நிலையங்களில் சுகாதாரமான மற்றும் புதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
