காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் பிறகு காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தி போன்ற தலைவர் தாக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என கூறியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற அட்டூழியங்கள் கண்டிப்பாக முடிவுக்கு வரும். இறுதியில் நீதியே வெல்லும் என நம்புகிறேன் என்ற பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.