காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருடைய ஒற்றுமையை தெரிவித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், களங்கப்படுத்தும் நோக்கத்துடன் நான் பேசவில்லை என ராகுல் காந்தி கூறிய பிறகும் அவருக்கு சிறை தண்டனை விதித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் பாஜக தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற அட்டூழியங்கள் கண்டிப்பாக முடிவுக்கு வரும். நான் சகோதரர் ராகுல் காந்தியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி என்னுடைய ஒற்றுமையை அவரிடம் தெரிவித்துள்ளேன். இறுதியில் நீதியே வெல்லும் என்ற பதிவிட்டுள்ளார்.