தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்றார். இதற்கு இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் பேரவையில் ஓபிஎஸ் பேசியதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா கூறியதாவது, அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தொண்டர்களிடம் கேட்டால் சரியாக சொல்வார்கள். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம். மேலும் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு அனைத்து விதமான உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.