அஜித்தின் ஏகே 62 படத்தை தடம், தடையறக் காக்க போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல அருண் விஜய் மகிழ் திருமேனியுடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக அருண் விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.